2024-06-09 ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்? Do you like to become ayurvedic therapist.. ? Earn while learning.. call us 90433360000 #panchakarma எலும்பு தேய்வுன்னு ஒன்று இருக்கா? இப்ப 90 வயது தாத்தாவுக்கே எலும்பு உடஞ்சுசுதுன்னு வச்சுக்குவோம் அப்பகூட எலும்பு சேரத்தானே செய்யுது. கடவுளோட அற்புத படைப்புகளில் எலும்பு அற்புதமான படைப்பு – எலும்பு எந்த வயசுல உடைஞ்சாலும் கூட தானே சேர்ந்து கொள்ளும். அதனால எலும்பில் பசையை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான். அதனால எலும்பு தேய்வுன்னு ஒன்று இருந்தால் கூட அதை முழு சரி செய்து விட முடியும்ன்னு ஆயுர்வேதம் சொல்கிறது. எட்டு வகையான ஆயுர்வேதப் பிரிவில் – முக்கியப் பிரிவான ரசாயனம் – வயதாவதை தடுக்கும் பிரிவு (Anti Aging Therapy ) இளமையோடு ஆரோக்கியத்தோடு வாழ்வது எப்படி என்று சொல்லித் தருகிறது – அதற்கென கூறப்பட்ட காயகல்ப, சஞ்ஜீவி மூலிகைகளும் சரியான நேரத்தில் தொடர்ந்து சாப்பிடும்போது இயற்கையான வயதான காலத்தில் வரும் மூட்டுவலியை கூட தடுத்துவிடலாம்.தாகமெடுத்தவுடன் – கிணறுவெட்டி தண்ணீர் குடிக்கும் கதிதான் இப்போது. நோய் வராமல் தடுப்பதைவிட்டுவிட்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை விட்டுவிட்டு , பணத்தை நோக்கி மூச்சிறைக்க ஓய்வின்றி ஓடுபவன், உரம் கலந்த உணவுகளை உண்டு, டிவியில் விளம்பரம் பார்த்து எது ஆரோக்கியமென்று அறிந்துகொள்ளும் மனிதர்களிடையே – நோய் நிரந்தரமாக குணமாக வேண்டுமானால் வலியினை தற்காலிகமாக மறக்க வைக்கும் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆயுர்வேதம் செல்லும்படி நடக்கவேண்டும்.ஆஹாரம், தூக்கம், ப்ரமசர்யம்- இம்மூன்றும் வாழ்க்கையினை 3 முக்கிய தூண்கள் இதில் எது குறைந்தாலும் மனிதனுக்கு வாத, பித்த, கப தோஷங்களிலும், 7 தாதுக்களிலும், உயிர் தாதுக்களின் சாராம்சம் ஓஜஸுனுடைய குறைவை ஏற்படுத்திவிடும். ப்ரமசர்யம் என்பது நாம் நினைப்பது போன்றது இல்லை. பெண்களை விட்டு விலகிகியிருப்பது இல்லை, சரியான முறையான குடும்ப வாழ்க்கையை போதிக்கும் – கௌடில்ய ப்ரமசர்யம் என்பதும் கூட அடங்கும். மூட்டுவலிக்கு சிகிச்சை சரியான நேரத்தில் அளிக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு மேலே கூறிய அடிப்படைத் தத்துவங்கள் மிக அவசியம். பஞ்சகர்மாவில் :- வஸ்தி சிகிச்சை எனப்படும், ஆசனவாய் வழியே எண்ணை மருந்துகளையோ, கஷாய மருந்துகளை உட்செலுத்தி வாதத்தின் பிரதான இடமான பெருங்குடலிலுள்ள வாதத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான சிகிச்சை. இது பொதுவாக7 நாட்கள், தொடர்ந்து நோயின் தன்மைக்கு ஏற்றவாறு நாட்களை கூட்டி முறையாக செய்யப்படும் அற்புத சிகிச்சை. மூட்டுகளில் தடவப்படும் எண்ணை சிகிச்சை, நவரகிழி, பிழிச்சல், வேஷ்டனம் (எண்ணை வைத்து கட்டுதல்). உபநாகம் (பற்றிடுதல்) போன்ற சிகிச்சைகளும், ஓத்தடம் கொடுக்கும் முறைகளும் (ஸ்வேதனம்) பச்சகிழி, இலக்கிழிகளும், மூட்டுகளுக்கும், பசையும், வலுவையும் விரைவில் கொடுத்திடும். ஒரு மனிதனுக்கு பசி எடுத்தது – சாப்பிட ஆரம்பித்தால் 4 இட்லி சாப்பிட்டான், பசி அடங்கவில்லை, 5வது இட்லி சாப்பிட்டவுடன் உடனடியாக அவனது பசி அடங்கியது அப்பாடா. 5வது இட்லியில் பசி அடங்கியிருந்தால் இனி 5வது இட்லியை மட்டும் முதலில் சாப்பிட்டு பசி அடங்க முடியுமா என்ன? ஆயின்மெண்ட் என்பது 5வது இட்லிபோலத்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாமே தவித முழு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை – அடிப்படை சிகிச்சை எடுத்த பின்னர் – எண்ணை அல்லது ஆயின்மெண்ட் பலன்தரும்.அடுத்து அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ? 2022-02-23 முடக்கு வாதம் என்னும் ரொமட்டாயட் மூட்டு வலிக்கான ஆயுர்வேத மருந்துகள் 2022-02-23 முடக்கு வாதம் என்னும் ரொமட்டாயட் மூட்டு வலிக்கான ஆயுர்வேத மருந்துகள் சந்தி வாதம் என்னும் எலும்பு தேய்மானத்தில் உபயோகிக்க படும் ஆயுர்வேத மருந்துகள் – கசாயங்களில் மாத்திரைகளில் சூர்ணங்களில் அரிச்டங்களில் க்ருதங்களில் பஸ்மங்களில் உள்ளே சாப்பிடும் எண்ணை/நெய் களில் லேகியங்களில் வெளி பூச்சு தைலங்களில் இதே போல பல வகையான தைலங்கள் உள்ளது .. சாதாரண கால் வலிக்கு ஏன் இத்தனை வகையான மருந்துகள் ? ஒருவருக்கு உள்ளது போல் அதே நோய் இன்னொருவர்க்கும் இருந்தாலும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் வேறு படும் ஏன் ? எல்லா வலிக்கும் ஒரே மருந்தை தர முடியாது ஏன் ? மேலே உள்ள மருந்துகளில் எல்லா வகையான (95 %) மருந்துகளும் என்னிடம் உள்ளது -இதை எப்படி தேர்ந்தெடுக்கிறேன் ? ஆயுர்வேத மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யுமென்று யார் சொன்னார்கள் ?. முழுமையான நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும் ?மருத்துவர் அ.முகமது சலீம், BAMS .,MD – Ayurveda in General Medicine ( Kaya Chikitsa )மூத்த தலைமை ஆயுர்வேத மருத்துவர்அல்ஷிபா ஆயூர்வேத மற்றும் ஆயூஷ் மருத்துவமனைகடையநல்லூர் மூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள் 2022-02-23 மூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள் கால் வலி உள்ள பல நோயாளிகளை தினமும் பார்க்கிறேன் ..அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு எண்ணைகளை ஒழுங்காக தேய்ப்பதே இல்லை . உள்மருந்துகளை சாப்பிடும் ஆர்வம் காட்டும் அதே நோயாளிகள் எண்ணைகளை தேய்ப்பதில் இல்லை காரணம் நூறு மிலி மூட்டு வலி தைலத்தை வைத்து கொண்டு மூன்று மாதங்களாக “இன்னும் தைலம் இருக்கு டாக்டர் “என்னும் நோயாளிகள் இன்னும் பலர் இருக்கிறார்கள் .எப்படி வலி குறையும் ? தைலம் தேய்ப்பது பற்றி ஆலோசனை .. தேய்க்கும் முறைகள் பற்றி – கால் மூட்டு எலும்பு தேய்மானதிற்கு எண்ணெய் தேய்க்க வேண்டிய இடங்கள் இவை .. வலி கால் மூட்டில் இருந்தாலும் இந்த இடத்தில எல்லாம் தைலம் தேய்க்கணும் .. வட்டிமிட்ட இடத்தில எல்லாம் வர்மம் ஒளிந்து கிடக்கிறது …. அடி வயிறு ,தொடையின் மேல்பக்கம் -இடுப்பெலும்பு சேருமிடம் …. இந்த இடத்தில்தான் சக்தியே ஒளிந்து கிடக்கிறது … எலும்பை ஒட்டிய காலின் வெளிபகுதி -மூன்று இடங்கள் -இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தும் பின் பக்க காலில் எண்ணெய் தேய்க்காமல் கால் வலி குறையவே குறையாது .. இது மிக முக்கியம் ..இது தான் ஆணி வேர் .. இந்த பகுதி -உள்ளந்தொடை,உள்ளம் பின் கால் -சதை நாரின் முடிச்சுக்கள் இவை ..இந்த நார் இல்லை எனில் மனிதன் நிற்கவே முடியாது .. வெளிப்பகமுள்ள இந்த நரம்பு காலுக்கு வலுவை கொடுக்கும் ..இங்கேயும் தைலம் தேய்க்கணும் .. பெட்டல்லா என்னும் இந்த சிப்பி எலும்பை இணைக்கும் இந்த மாய புள்ளிகள் மூட்டுக்கு பலம் .இந்த புள்ளியில் வலுவில்லை எனில் மூட்டில் சத்தம் வரும் .மூட்டு ஆடி விடும் ,மூட்டு -பிணைபில்லாமல் போய் விடும் .. வெளிபகமுள்ள இந்த புள்ளிகள் -கணுக்காலுக்கும் ,மூட்டுக்கும் உள்ள இணைப்பை வலு படுத்தும் .. இந்த புள்ளிகள் சதை நார்கள்..இந்த நார் இல்லாமல் மனித மாலை கிடையாது மூட்டுக்கு அதிக வேலை கொடுத்தவர்களுக்கு இந்த நரம்பில் வலு இருக்காது விளையாட்டு வீரர்களுக்கும் ,அடிபடுவதாலும் இந்த புள்ளி எளிதில் பாதிப்பு அடையும் சதை நார் கிழிந்து விட்டது என்று இதை தான் சொல்வார்கள் பின் உள்ள இந்த புள்ளிக்கு -மனிதனை தாங்கும் வேர் என்று பெயர் ..மேலேயுள்ள இந்த வட்டத்தில் தைலம் தேய்த்து வந்தால் ..மூட்டு வலி பறந்து மறைந்து போகும் 2022-02-23 மூட்டு வலிக்கான எளிய பயிற்சிகள் -பல படங்களுடன் சரகரின் அங்க மர்த ப்ரஷமணம் என்னும் உடல் மேல் வலிகளை போக்கும் உடல் சோர்வை நீக்கும் மூலிகைகளின் தொகுப்பு .. சரகரின் மகா கசாய வர்க்கத்தில் மேல் வலிகளை போக்கும் பத்து மூலிகைகளின் தொகுப்பு இங்கே படங்களின் கொடுக்கபட்டுள்ளது இந்த பத்து மூலிகைகள் பால் முதுக்கன் கிழங்கு -Pueraria Tuberosa என்னும் விதாரி.. விந்துவை பெருக்கும்-உடல் ஆற்றலை கொடுக்கும் -வயதாகாமல் தடுக்ககூடிய ரசாயனமாக -காய கல்பமாக பயன்படும் ப்ருஷ்ணீ பரணீ-desmodium gangeticum என்னும் மூவிலை பசியை தூண்டும் ,இதயத்திற்கு நல்லது ,நீர் வாதத்தை குறைக்கும் ,வாய்வை வெளியேற்றும் ,வலிகளை போக்கும் ப்ருஹதி என்னும் –solanum indicum முள்ளங் கத்தரி இதயத்தை வலுபடுத்தும் ,மலத்தை இறுக்கும்,மூத்திரம் பெருக்கும் ,வலிகளை போக்கும் கண்டகாரி என்னும்-Solanum xanthocarpum கண்டங் கத்தரி ஆமவாததை போக்கும் ,சிறுநீரக கல்லை கரைக்கும் ,வலிகளை போக்கும் ,சளிக்கும் நல்லது ஏரண்டம் என்னும் Ricinus communis -ஆமணக்கு மலத்தை போக்கும் ,இடுப்பு வலிகளை போக்கும் ,தாய்ப்பால் பெருக்கும் ,விந்துவை சுத்தபடுத்தும்,நடுக்கு வாதத்தை போக்கும் சந்தனம் –santalum albumவாத நீரை போக்கும் ,தாகத்தை தணிக்கும் ,விந்துவின் அதிக போக்கை போக்கும் ,தலை வலி ,மற்றுமுள்ள உடல் வலிகளை போக்கும் உஷீரம் என்னும் -Vetiveria zizanioides விலாமிச்சை வேர் பசியை தூண்டி ,வாத நீரை குறைக்கும் ,மூத்திரம் பெருக்கும் ஏல என்னும்-Elettaria cardamomum ஏலக்காய் பசி தூண்டும் ,வயிறு வலி போக்கும் ,விந்தவை கட்டும் ,வலிகளை போக்கும் மதுயஷ்டி என்னும் –glycyrrhiza glabraஅதிமதுரம் சதை வலிகளை போக்குவதில் அசதிகளை போக்குவதில் அதிமதுரமே சிறந்தது மேலே சொன்ன இந்த பத்து மூலிகைகளும் நமக்கு -வலிகளை போக்கும் என்று ஆராய்சிகளும் நிரூபிக்கிறது