
2024-06-09
ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?
Do you like to become ayurvedic therapist.. ?
Earn while learning..
call us 90433360000
#panchakarma
எலும்பு தேய்வுன்னு ஒன்று இருக்கா? இப்ப 90 வயது தாத்தாவுக்கே எலும்பு உடஞ்சுசுதுன்னு வச்சுக்குவோம் அப்பகூட எலும்பு சேரத்தானே செய்யுது. கடவுளோட அற்புத படைப்புகளில் எலும்பு அற்புதமான படைப்பு – எலும்பு எந்த வயசுல உடைஞ்சாலும் கூட தானே சேர்ந்து கொள்ளும். அதனால எலும்பில் பசையை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான். அதனால எலும்பு தேய்வுன்னு ஒன்று இருந்தால் கூட அதை முழு சரி செய்து விட முடியும்ன்னு ஆயுர்வேதம் சொல்கிறது.

எட்டு வகையான ஆயுர்வேதப் பிரிவில் – முக்கியப் பிரிவான ரசாயனம் – வயதாவதை தடுக்கும் பிரிவு (Anti Aging Therapy ) இளமையோடு ஆரோக்கியத்தோடு வாழ்வது எப்படி என்று சொல்லித் தருகிறது – அதற்கென கூறப்பட்ட காயகல்ப, சஞ்ஜீவி மூலிகைகளும் சரியான நேரத்தில் தொடர்ந்து சாப்பிடும்போது இயற்கையான வயதான காலத்தில் வரும் மூட்டுவலியை கூட தடுத்துவிடலாம்.தாகமெடுத்தவுடன் – கிணறுவெட்டி தண்ணீர் குடிக்கும் கதிதான் இப்போது. நோய் வராமல் தடுப்பதைவிட்டுவிட்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை விட்டுவிட்டு , பணத்தை நோக்கி மூச்சிறைக்க ஓய்வின்றி ஓடுபவன், உரம் கலந்த உணவுகளை உண்டு, டிவியில் விளம்பரம் பார்த்து எது ஆரோக்கியமென்று அறிந்துகொள்ளும் மனிதர்களிடையே – நோய் நிரந்தரமாக குணமாக வேண்டுமானால் வலியினை தற்காலிகமாக மறக்க வைக்கும் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆயுர்வேதம் செல்லும்படி நடக்கவேண்டும்.ஆஹாரம், தூக்கம், ப்ரமசர்யம்- இம்மூன்றும் வாழ்க்கையினை 3 முக்கிய தூண்கள் இதில் எது குறைந்தாலும் மனிதனுக்கு வாத, பித்த, கப தோஷங்களிலும், 7 தாதுக்களிலும், உயிர் தாதுக்களின் சாராம்சம் ஓஜஸுனுடைய குறைவை ஏற்படுத்திவிடும். ப்ரமசர்யம் என்பது நாம் நினைப்பது போன்றது இல்லை. பெண்களை விட்டு விலகிகியிருப்பது இல்லை, சரியான முறையான குடும்ப வாழ்க்கையை போதிக்கும் – கௌடில்ய ப்ரமசர்யம் என்பதும் கூட அடங்கும். மூட்டுவலிக்கு சிகிச்சை சரியான நேரத்தில் அளிக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு மேலே கூறிய அடிப்படைத் தத்துவங்கள் மிக அவசியம்.




பஞ்சகர்மாவில் :- வஸ்தி சிகிச்சை எனப்படும், ஆசனவாய் வழியே எண்ணை மருந்துகளையோ, கஷாய மருந்துகளை உட்செலுத்தி வாதத்தின் பிரதான இடமான பெருங்குடலிலுள்ள வாதத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான சிகிச்சை. இது பொதுவாக7 நாட்கள், தொடர்ந்து நோயின் தன்மைக்கு ஏற்றவாறு நாட்களை கூட்டி முறையாக செய்யப்படும் அற்புத சிகிச்சை. மூட்டுகளில் தடவப்படும் எண்ணை சிகிச்சை, நவரகிழி, பிழிச்சல், வேஷ்டனம் (எண்ணை வைத்து கட்டுதல்). உபநாகம் (பற்றிடுதல்) போன்ற சிகிச்சைகளும், ஓத்தடம் கொடுக்கும் முறைகளும் (ஸ்வேதனம்) பச்சகிழி, இலக்கிழிகளும், மூட்டுகளுக்கும், பசையும், வலுவையும் விரைவில் கொடுத்திடும். ஒரு மனிதனுக்கு பசி எடுத்தது – சாப்பிட ஆரம்பித்தால் 4 இட்லி சாப்பிட்டான், பசி அடங்கவில்லை, 5வது இட்லி சாப்பிட்டவுடன் உடனடியாக அவனது பசி அடங்கியது அப்பாடா. 5வது இட்லியில் பசி அடங்கியிருந்தால் இனி 5வது இட்லியை மட்டும் முதலில் சாப்பிட்டு பசி அடங்க முடியுமா என்ன? ஆயின்மெண்ட் என்பது 5வது இட்லிபோலத்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாமே தவித முழு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை – அடிப்படை சிகிச்சை எடுத்த பின்னர் – எண்ணை அல்லது ஆயின்மெண்ட் பலன்தரும்.
அடுத்து அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ?
2022-02-23
முடக்கு வாதம் என்னும் ரொமட்டாயட் மூட்டு வலிக்கான ஆயுர்வேத மருந்துகள்
2022-02-23
முடக்கு வாதம் என்னும் ரொமட்டாயட் மூட்டு வலிக்கான ஆயுர்வேத மருந்துகள்
சந்தி வாதம் என்னும் எலும்பு தேய்மானத்தில் உபயோகிக்க படும் ஆயுர்வேத மருந்துகள்

–
கசாயங்களில்
- மாஹா ராஸ்னாதி கசாயம் -காலை மாலை வெறும் வயிற்றில்
- ராஸ்னாதி கசாயம் –
- ராசன ஏறண்டாதி கசாயம்
- ராஸ்னா சப்தகம் கசாயம்
- அஷ்ட வர்க்கம் கசாயம்
- இந்துகாந்தம் கசாயம்
- குக்கலு திக்தகம் கசாயம்
- தான்வன்தரம் கசாயம்
- சஹாச்சராதி கசாயம்
- பிரசாரின்யாதி கசாயம்
மாத்திரைகளில்
- மாஹா யோக ராஜ குக்குலு
- மாஹா வாத கஜான்குச ரசம்
- மாஹா வாத வித்வாம்சி ரசம்
- அச்வங்கந்தா குடிகா
- யோகராஜா குக்குலு
- கைசோர குக்குலு
- அபாதி குக்குலு
- லாக்ஷாதி குக்குலு
- சங்க வடி
- பரநாத குடிகா
- வாதாரி ரசம்
- யோகேந்திர ரசம்
- ப்ருஹத் வாத சிந்தாமணி ரசம்
- சதுர்முக ரசம்
- சிந்தாமணி சதுர்முக ரசம்
- ஸ்வர்ண பூபதி ரசம்
- ஸ்வர்ண குக்கலு
- ராஸ்னாதி குக்கலு
- சிம்ஹநாத குக்குலு
- வாதாரி குக்கலு
- நவ ரத்னா ராஜ ம்ருகாங்க ரச
சூர்ணங்களில்
- அஸ்வகந்தா சூர்ணம்
- முச்தாதி சூரணம்
- லாக்ஷா சூர்ணம்
- பலா அஸ்வகந்தா சூர்ணம்
- மதுயஷடி சூர்ணம்
- வஜ்ரவல்லி சூர்ணம்
- அஸ்தி வல்கலாதி சூர்ணம்
- வைஸ்வனார சூர்ணம்
- திரிபலா சூர்ணம்
அரிச்டங்களில்
- அச்வகந்தாரிசம்
- பலாரிச்டம்
- தேவதாரு அரிஷ்டம்
- தஷமூல அரிஷ்டம்
- தன்வந்தர அரிஷ்டம்
- லாக்ஷா ஸ்ருங்கா அரிஷ்டம்
க்ருதங்களில்
- இந்துகாந்தம் கிருதம்
- லசுனாதி கிருதம்
- த்ரி கண்டக க்ரிதம்
- ராஸ்னாதி கிருதம்
- வீர்ய வர்தனி கிருதம்
பஸ்மங்களில்
- சங்க பஸ்மம்
- பவள பஸ்மம்
- ஸ்வர்ண பஸ்மம்
- ஹரதால பஸ்மம்
- ஆறுமுக சிந்தூரம் (சித்தா)
- சண்ட மாருத சிந்தூரம் (சித்தா)
- குக்கலு பஸ்மம்
உள்ளே சாப்பிடும் எண்ணை/நெய் களில்
- க்ஷீர பாலா -101
- தான்வன்தரம் 101
- கந்த தைலம்
- பாலா தைலம்
- சாகச்சராதி தைலம் –
லேகியங்களில்
- அஸ்வகந்தா லேஹியம்
- தசமூல ஹரீதகி லேஹியம்
- ச்யவன ப்ரஸா லேஹியம்
- அம்ருத பல்லதாக லேஹியம்
- வஜ்ரா வள்ளி லேஹியம்
- தசமூல லேஹியம்
வெளி பூச்சு தைலங்களில்
- மகா நாராயண தைலம்
- தன்வன்தரம் தைலம்
- கொட்டம் சுக்காதி தைலம்
- கற்பூராதி தைலம்
- பிண்ட தைலம்
- பிரபஞ்சன் விமார்த்தன் தைலம்
- கார்பாசஸ்தயாதி தைலம்
- மஹா விஷ கார்ப தைலம்
- சுத்த பாலா தைலம்
- பஞ்ச குணா தைலம்
- க்ஷீர பாலா தைலம்
- மஹா மாஷா தைலம்
- முக்கூட்டு தைலம்
- சஹாச்சராதி தைலம்
- ப்ராஸ்ரின்யாதி தைலம்
- சைந்தவாதி தைலம்
- தான்வன்தரம் குழம்பு
- பிரபஞ்சன விமர்தன குழம்பு
- அஸ்வகந்த பாலா லாக்ஹ்ஷாதி தைலம்
- மதுயச்டி தைலம்
இதே போல பல வகையான தைலங்கள் உள்ளது ..
சாதாரண கால் வலிக்கு ஏன் இத்தனை வகையான மருந்துகள் ?
ஒருவருக்கு உள்ளது போல் அதே நோய் இன்னொருவர்க்கும் இருந்தாலும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் வேறு படும் ஏன் ?
எல்லா வலிக்கும் ஒரே மருந்தை தர முடியாது ஏன் ?
மேலே உள்ள மருந்துகளில் எல்லா வகையான (95 %) மருந்துகளும் என்னிடம் உள்ளது -இதை எப்படி தேர்ந்தெடுக்கிறேன் ?
ஆயுர்வேத மருந்துகள் மெதுவாகத்தான் வேலை செய்யுமென்று யார் சொன்னார்கள் ?.
முழுமையான நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும் ?மருத்துவர் அ.முகமது சலீம், BAMS .,MD – Ayurveda in General Medicine ( Kaya Chikitsa )மூத்த தலைமை ஆயுர்வேத மருத்துவர்
அல்ஷிபா ஆயூர்வேத மற்றும் ஆயூஷ் மருத்துவமனைகடையநல்லூர்
மூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள்
2022-02-23
மூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள்
கால் வலி உள்ள பல நோயாளிகளை தினமும் பார்க்கிறேன் ..அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு எண்ணைகளை ஒழுங்காக தேய்ப்பதே இல்லை .
உள்மருந்துகளை சாப்பிடும் ஆர்வம் காட்டும் அதே நோயாளிகள் எண்ணைகளை தேய்ப்பதில் இல்லை
காரணம்
- வலிகளுக்கு தேய்த்தவுடன் இந்த எண்ணெய் மருந்துகள் வலிகளை கேட்காது .இது அவர்கள் மனதில் சோர்வை ஏற்படுத்தலாம் ..
- எண்ணெய் பிசுபிசுக்கு பலருக்கு பிடிபதில்லை
- நேரம் ஒதுக்க முடிவதில்லை ..
- எண்ணெய் தேய்யதாலும் ஒத்தடம் கொடுக்க கஷ்டம்
- தினமும் தேய்ப்பதில் ஒரு சோம்பல்
நூறு மிலி மூட்டு வலி தைலத்தை வைத்து கொண்டு மூன்று மாதங்களாக “இன்னும் தைலம் இருக்கு டாக்டர் “என்னும் நோயாளிகள் இன்னும் பலர் இருக்கிறார்கள் .எப்படி வலி குறையும் ?
தைலம் தேய்ப்பது பற்றி ஆலோசனை ..
- முறையான தைலம் தேய்க்கும் முறைகள் மூட்டுக்குள் எண்ணெய் பசையை உருவாக்கும்
- குறைந்த பட்சம் ஒரு முறைக்கு பத்து மிலியாவது தேய்க்கணும் ..தேய்த்த பின் ஒத்தடமும் கொடுக்கணும் ..
- வலி இருந்தாலும் குறைந்தாலும் தினமும் தேய்க்கணும்
- காய்ந்த மரம் போல் உள்ள எலும்பில் பசை உண்டாகும்
- முழுமையான தீர்வு பெற மருத்துவரின் சொல் பேச்சு கேட்கணும்
- வலி நிவாரண ஆயின்மென்ட் எல்லாம் தற்காலிகம் தான்
தேய்க்கும் முறைகள் பற்றி –
கால் மூட்டு எலும்பு தேய்மானதிற்கு எண்ணெய் தேய்க்க வேண்டிய இடங்கள் இவை ..
வலி கால் மூட்டில் இருந்தாலும் இந்த இடத்தில எல்லாம் தைலம் தேய்க்கணும் ..
வட்டிமிட்ட இடத்தில எல்லாம் வர்மம் ஒளிந்து கிடக்கிறது ….

அடி வயிறு ,தொடையின் மேல்பக்கம் -இடுப்பெலும்பு சேருமிடம் ….
இந்த இடத்தில்தான் சக்தியே ஒளிந்து கிடக்கிறது …

எலும்பை ஒட்டிய காலின் வெளிபகுதி -மூன்று இடங்கள் -இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தும்

பின் பக்க காலில் எண்ணெய் தேய்க்காமல் கால் வலி குறையவே குறையாது ..
இது மிக முக்கியம் ..இது தான் ஆணி வேர் ..

இந்த பகுதி -உள்ளந்தொடை,உள்ளம் பின் கால் -சதை நாரின் முடிச்சுக்கள் இவை ..இந்த நார் இல்லை எனில் மனிதன் நிற்கவே முடியாது ..

வெளிப்பகமுள்ள இந்த நரம்பு காலுக்கு வலுவை கொடுக்கும் ..இங்கேயும் தைலம் தேய்க்கணும் ..

பெட்டல்லா என்னும் இந்த சிப்பி எலும்பை இணைக்கும் இந்த மாய புள்ளிகள் மூட்டுக்கு பலம் .இந்த புள்ளியில் வலுவில்லை எனில் மூட்டில் சத்தம் வரும் .மூட்டு ஆடி விடும் ,மூட்டு -பிணைபில்லாமல் போய் விடும் ..

வெளிபகமுள்ள இந்த புள்ளிகள் -கணுக்காலுக்கும் ,மூட்டுக்கும் உள்ள இணைப்பை வலு படுத்தும் ..
இந்த புள்ளிகள் சதை நார்கள்..இந்த நார் இல்லாமல் மனித மாலை கிடையாது

மூட்டுக்கு அதிக வேலை கொடுத்தவர்களுக்கு இந்த நரம்பில் வலு இருக்காது

விளையாட்டு வீரர்களுக்கும் ,அடிபடுவதாலும் இந்த புள்ளி எளிதில் பாதிப்பு அடையும்
சதை நார் கிழிந்து விட்டது என்று இதை தான் சொல்வார்கள்

பின் உள்ள இந்த புள்ளிக்கு -மனிதனை தாங்கும் வேர் என்று பெயர் ..
மேலேயுள்ள இந்த வட்டத்தில் தைலம் தேய்த்து வந்தால் ..மூட்டு வலி பறந்து மறைந்து போகும்
2022-02-23
மூட்டு வலிக்கான எளிய பயிற்சிகள் -பல படங்களுடன்
சரகரின் அங்க மர்த ப்ரஷமணம் என்னும் உடல் மேல் வலிகளை போக்கும் உடல் சோர்வை நீக்கும் மூலிகைகளின் தொகுப்பு ..
சரகரின் மகா கசாய வர்க்கத்தில் மேல் வலிகளை போக்கும் பத்து மூலிகைகளின் தொகுப்பு இங்கே படங்களின் கொடுக்கபட்டுள்ளது
- ஷாலி பர்னீ என்னும் பால் முதுக்கன் கிழங்கு
- ப்ருஷ்ணீ பர்னீ என்னும் மூவிலை
- ப்ருஹதி என்னும் முள்ளங் கத்தரி
- கண்டகாரி என்னும் கண்டங் கத்தரி
- ஏரண்டம் என்னும் ஆமணக்கு
- காகொலி என்னும் காகோலி
- சந்தனம் என்னும் சந்தனம்
- உஷீரம் என்னும் விலாமிச்சை வேர்
- ஏலம் என்னும் ஏலக்காய்
- மதுயச்டி என்னும் அதிமதுரம்
இந்த பத்து மூலிகைகள்
- உடல் வலிகளை போக்கும்
- உடல் அசதியை போக்கும்
- உடல் மேல் கை கால் உளைச்சலை போக்கும்
- உடல் பலஹீனத்தை போக்கும்
- வலிகளை போக்கி தாதுக்களை வலுப்படுத்தும்
- விந்து விட்டாலும் (அதிக புணர்ச்சியினால் உடல் பலஹீனம் ) உடலை வலி சோர்வி லிருந்து காப்பாற்றும்
பால் முதுக்கன் கிழங்கு -Pueraria Tuberosa என்னும் விதாரி..
விந்துவை பெருக்கும்-உடல் ஆற்றலை கொடுக்கும் -வயதாகாமல் தடுக்ககூடிய ரசாயனமாக -காய கல்பமாக பயன்படும்

ப்ருஷ்ணீ பரணீ-desmodium gangeticum என்னும் மூவிலை
பசியை தூண்டும் ,இதயத்திற்கு நல்லது ,நீர் வாதத்தை குறைக்கும் ,வாய்வை வெளியேற்றும் ,வலிகளை போக்கும்

ப்ருஹதி என்னும் –solanum indicum முள்ளங் கத்தரி இதயத்தை வலுபடுத்தும் ,மலத்தை இறுக்கும்,மூத்திரம் பெருக்கும் ,வலிகளை போக்கும்

கண்டகாரி என்னும்-Solanum xanthocarpum கண்டங் கத்தரி ஆமவாததை போக்கும் ,சிறுநீரக கல்லை கரைக்கும் ,வலிகளை போக்கும் ,சளிக்கும் நல்லது

ஏரண்டம் என்னும் Ricinus communis -ஆமணக்கு
மலத்தை போக்கும் ,இடுப்பு வலிகளை போக்கும் ,தாய்ப்பால் பெருக்கும் ,விந்துவை சுத்தபடுத்தும்,நடுக்கு வாதத்தை போக்கும்

சந்தனம் –santalum albumவாத நீரை போக்கும் ,தாகத்தை தணிக்கும் ,விந்துவின் அதிக போக்கை போக்கும் ,தலை வலி ,மற்றுமுள்ள உடல் வலிகளை போக்கும்
_in_Hyderabad,_AP_W_IMG_0029.jpg)
உஷீரம் என்னும் -Vetiveria zizanioides விலாமிச்சை வேர் பசியை தூண்டி ,வாத நீரை குறைக்கும் ,மூத்திரம் பெருக்கும்

ஏல என்னும்-Elettaria cardamomum ஏலக்காய் பசி தூண்டும் ,வயிறு வலி போக்கும் ,விந்தவை கட்டும் ,வலிகளை போக்கும்

மதுயஷ்டி என்னும் –glycyrrhiza glabraஅதிமதுரம் சதை வலிகளை போக்குவதில் அசதிகளை போக்குவதில் அதிமதுரமே சிறந்தது
மேலே சொன்ன இந்த பத்து மூலிகைகளும் நமக்கு -வலிகளை போக்கும் என்று ஆராய்சிகளும் நிரூபிக்கிறது